உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காசநோய், டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காசநோய், டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஈரோடு, ஜம்பை வட்டாரம், ஆப்பக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.காசநோய் பரவும் விதம், அறிகுறி, பரிசோதனை, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன், அரசு வழங்கும் உதவித்தொகை, மழைக்காலங்களில் வீட்டை சுற்றிலும் பராமரிப்பு, டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மருத்துவ அலுவலர் தனலட்சுமி, மேற்பார்வையாளர் தரணிதரன், புவனேஸ்வரி, சுமன் பிரேம் உட்பட பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் காசநோய், டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி, நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை, சளி பரிசோதனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி