உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெட்டி கடைக்காரரை தாக்கிய இருவர் கைது

பெட்டி கடைக்காரரை தாக்கிய இருவர் கைது

ஈரோடு, ஈரோடு மாணிக்கம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 48; நாராயண வலசு பகுதியில் டாஸ்மாக் பார் அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார்.இரு தினங்களுக்கு முன் போதையில் வந்த இருவர், முருகேசனிடம் தகராறில் ஈடுபட்டு முகத்தில் குத்தியதில் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. வீரப்பன்சத்திரம் போலீசில் அவர் அளித்த புகாரின்படி, ஈரோடு மாணிக்கம்பாளையம் வக்கீல் தோட்டம் சரவணகுமார், 25; ஈரோடு இடையன்காட்டு வலசு வாரணவாசி வீதி கதிரேசன், 24, ஆகியோரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி