குட்கா பதுக்கிய இருவர் கைது
பெருந்துறை, பெருந்துறை அடுத்த மேட்டுக்கடை பகுதியில், பெருந்துறை போலீசார் நேற்று முன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு நின்றிருந்த காரில் சோதனை செய்தனர். இதில், 12,000 ரூபாய் மதிப்புள்ள, 75 கிராம் குட்கா பொருட்களை கைப்பற்றினர். காரில் இருந்த ஈரோடு பாலுசாமி வீதி தண்டபாணி, 42; மேட்டுக்கடை ஜான்சன், 30, ஆகியோரிடம் மேற்கொண்டு நடத்திய விசாரித்தனர். இதில் அவல்பூந்துறை அருகே செங்காட்டுவலசில் ஒரு தோட்டத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து பதுக்கி வைத்து குட்கா பொருட்கள் விற்பதாக தெரிவித்தனர். அங்கு நடத்திய சோதனையில், ௩.௯௬ லட்சம் ரூபாய் மதிப்பிலான 676 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.