போதை மாத்திரை விற்ற இருவர் கைது
ஈரோடு:ஈரோடு, செங்குந்தபுரம் விநாயகர் கோவில் வீதி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக, சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ரோந்து சென்றபோது, செங்குந்தபுரத்தை சேர்ந்த கார்த்தி, 23; கங்காபுரம் நீலிக்கரை கமலேஷ், 26, ஆகியோரிடம் சோதனை செய்தபோது, வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, 100 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.