உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மது குடிக்க பணம் கேட்டு மிரட்டிய இருவர் கைது

மது குடிக்க பணம் கேட்டு மிரட்டிய இருவர் கைது

ஈரோடு, ஈரோட்டில், மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு, மூலப்பாளையம் அண்ணமார் பெட்ரோல் பங்க் பகுதியை சேர்ந்தவர் பூபதி, 28. நேற்று முன்தினம் பவானி மெயின் ரோடு சி.டி. மில் அருகே நடந்து சென்றார். அப்போது வந்த சென்னிமலையை சேர்ந்த ஓம் சக்தி, 31, விவேகானந்தர் நகர் விக்கி, 29, செட்டிபாளையத்தை சேர்ந்த லோகேஷ், 31, ஆகியோர் பூபதியிடம் மதுகுடிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் பணம் தர பூபதி மறுத்துள்ளார்.இதில் ஆத்திரமடைந்த மூவரும், பூபதியை சரமாரியாக தாக்கினர். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பூபதி, அளித்த புகார்படி கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து ஓம் சக்தி, லோகேஷ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான விக்கியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை