உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொங்கு பள்ளியில் இருபெரும் விழா

கொங்கு பள்ளியில் இருபெரும் விழா

பெருந்துறை, ;பெருந்துறை, கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளியில் இலக்கியச் சோலை தொடக்க விழா, காமராஜர், 123வது பிறந்தநாள் விழா என இருபெரும் விழா நடந்தது. பள்ளி தலைவர் யசோதரன் தலைமை வகித்தார். தாளாளர் சென்னியப்பன், துணைத் தலைவர் குமாரசாமி முன்னிலை வகித்தனர். முதல்வர் முத்துசுப்பிரமணியம் வரவேற்றார். இணைச் செயலாளர் முத்துராமலிங்கம் அறிமுகவுரை நிகழ்த்தினார்.சிறப்பு விருந்தினராக கோவை சுகுணா கலை அறிவியல் கல்லுாரி தமிழ்துறைப் பேராசிரியர் சாந்தாமணி கலந்து கொண்டார். இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி, வானம் வசப்படும் என்ற தலைப்பில் பேசினார். பள்ளி முதுகலை தமிழாசிரியர் ரவிக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ