உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நிலத்தை அபகரிக்க முயல்வதாக எஸ்.பி., ஆபீசில் இருவர் மனு

நிலத்தை அபகரிக்க முயல்வதாக எஸ்.பி., ஆபீசில் இருவர் மனு

ஈரோடு, பவானி அருகே ஒலகடம் கூணக்காபாளையத்தை சேர்ந்தவர் கமலா. ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் மனு வழங்கி கூறியதாவது: எனது கணவரும், அப்பாவும் இறந்து விட்டனர். எனது தாயார், மகனுடன் வசித்து வருகிறேன். எங்களுக்கு கல்பாவி கிராமத்தில் கட்டியக்கவுண்டனுாரில், 2.15 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில், 43 ஆண்டாக விவசாயம் செய்கிறோம். அங்கு விவசாயம் செய்ய விடாமல், பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர், மிரட்டி நிலத்தை அபகரிக்க முயல்கிறார். எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, தொடர்ந்து விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.இதேபோல் பவானி அருகே முத்துரெட்டியூரை சேர்ந்த புவனேஷ், எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியதாவது: எங்களுக்கு சொந்தமான நிலம், கட்டியக்கவுண்டனுாரில் உள்ளது. அதே ஊரை சேர்ந்த ஒருவர் உழவு செய்து, எங்களை உள்ளே வரக்கூடாது என மிரட்டுகிறார். எங்கள் நிலத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !