மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம், சுண்ணாம்பு ஓடை அருகே, நேற்று முன்தினம், 26 பிராந்தி பாட்டில்களை வைத்திருந்த, ஆர்.என்.புதுார் மாயபுரத்தை சேர்ந்த ரங்கநாதன், 45, என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் கருங்கல்பாளையம் கண்ணையன் வீதியில் விற்பனைக்கு வைத்திருந்த, 27 பிராந்தி பாட்டில்களை ஈரோடு மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கருங்கல்பாளையம், ஜானகியம்மாள் லே அவுட் வேலுசாமி மனைவி பழனியம்மாளை, 65, கைது செய்தனர். * அம்மாபேட்டை அடுத்த பி.கே.புதுார், மாரியம்மன் கோவில் அருகே, சந்துக்கடையில் மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சோமு, 49, என்பவரை போலீசார் கைது செய்து, 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.