உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரண்டு மனைவிக்காரர் போக்சோவில் கைது

இரண்டு மனைவிக்காரர் போக்சோவில் கைது

பெருந்துறை, சிறுமி காணவில்லை என்று பதிவு செய்யப்பட்ட வழக்கு, நேற்று போக்சோ வழக்காக மாற்றப்பட்டு, இரண்டு மனைவிக்காரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர், தற்போது பெருந்துறையில் குடியிருந்து வருகிறார். இவரது, 13 வயது மகள் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், பெருந்துறைக்கு வந்த சிறுமியை, கடந்த 14ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து, சிறுமியின் தந்தை கொ-டுத்த புகார்படி, பெருந்துறை போலீசார் தேடி வந்தனர்.விசாரணையில், சிறுமிக்கு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த மேல கண்டமங்கலத்தை சேர்ந்த செல்வராஜ், 42, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பழகி வந்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் தாய் கண்டித்து, பெருந்துறையில் உள்ள அவரது தந்தையிடம் அனுப்பி வைத்துள்ளார். இதை அறிந்து கொண்ட செல்வராஜ், பெருந்துறை வந்து சிறுமியை அழைத்து சென்றுள்ளார். செல்வராஜூக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி ரேகா, 40, மகன்கள் கிருத்திக்ராஜ், 14, அபினேஷ், 11, உள்ளனர். மேலும் செல்வராஜின் இரண்டாவது மனைவியாக வெண்ணிலா, 35, உள்ளார்.இதையடுத்து பெருந்துறை போலீசார், நேற்று செல்வராஜை போக்சோ வழக்கில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை