மொபைல் போன் பறித்த இரு வாலிபருக்கு காப்பு
ஈரோடு:ஈரோட்டில், தொழிலாளியிடம் மொபைல்போன் பறித்த, இருவரை போலீசார் கைது செய்தனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டியன், 40, ஈரோட்டில் ஹோட்டல் வேலை பார்த்து வருகிறார். கடந்த, 15ல் ஈரோடு தீயணைப்பு நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இரு வாலிபர்கள், பாண்டியனிடம் மொபைல் போனை பறித்து கொண்டு, தப்பி சென்றனர். சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது ஈரோடு ஜீவானந்தம் சாலை ஓடைப்பள்ளத்தை சேர்ந்த அமானுல்லா மகன் அப்துல்லா, 19, லக்காபுரம் கரட்டங்காட்டினை சேர்ந்த துரைசாமி மகன் பிரகாஷ், 19, என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, மொபைல் போனை மீட்டனர்.