உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துணை முதல்வரானார் உதயநிதி; பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

துணை முதல்வரானார் உதயநிதி; பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஈரோடு: தி.மு.க., இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி, நேற்று துணை முதல்வராக பொறுப்பேற்றதை கொண்டாடும் வகையில், ஈரோடு மாநகர தி.மு.க., சார்பில் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடினர்.ஈரோடு, பெரியார் நகர் பகுதி கழகம் சார்பில், சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பில், பெரியார் நகர் பகுதி செயலாளர் அக்னி சந்துரு தலைமையில், மாநகர செயலாளர் சுப்பிரமணியம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.இதனையடுத்து, பெரியசேமூர் பகுதி கழகம் சார்பில், வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் துணை மேயர் செல்வராசு தலைமையில், மாநகர செயலாளர் சுப்பிரமணியம் இனிப்பு வழங்கினார். வீரப்பன் சத்திரம், கனிராவுத்தர் குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இந்நிகழ்க்சியில் மண்டல தலைவர் சசிகுமார், மாமன்ற உறுப்பினர் ரேவதி திருநாவுக்கரசு, மாநகர துணை செயலாளர் விமல், நெசவாளர் அணி கோபால்சாமி, வட்ட செயலாளர் அன்பழகன், மாணவர் அணி மாநகர அமைப்பாளர் ஸ்ரீதர், மின் தொ.மு.ச., சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை