திருமணமாகாத விரக்தி வாலிபர் விபரீத முடிவு
திருமணமாகாத விரக்திவாலிபர் விபரீத முடிவுசத்தியமங்கலம், அக். 23-சத்தியமங்கலத்தில் பழைய ஆர்.டி.ஓ.,ஆபீஸ் அருகில், வாலிபர் ஒருவர் நேற்று வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். அப்பகுதிவாசிகள் மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.சத்தி போலீசார் விசாரணையில், புளியம்பட்டி அருகேயுள்ள எரப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார், 39, கூலி தொழிலாளி என்பது தெரிந்தது. திருமணமாகாத விரக்தியில் இருந்தவர், வாழ பிடிக்காமல் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.