உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கேங்மேன்களை கள உதவியாளர்களாக்க செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

கேங்மேன்களை கள உதவியாளர்களாக்க செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

ஈரோடு, கேங்மேன்களை, கள உதவியாளர்களாக மாற்ற வலியுறுத்தி, ஈரோட்டில் நடந்த தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்துக்கு மாநில தலைவர் தமிழரசு தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் ஸ்ரீராமன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், மின்வாரியத்தில், அனைத்து பணிகளையும் செய்து வரும் கேங்மேன் பணியாளர்கள் அனைவரையும், உடனடியாக கள உதவியாளர்களாக பதவி மாற்றம் செய்ய வேண்டும். விருப்ப பணியிட மாறுதல், மருத்துவ இட மாறுதல் கோரும் கேங்மேன்களுக்கு, உடனே பணியிட மாறுதல் வழங்க வேண்டும். ஏற்கனவே பணியிட மாற்ற ஆணை பெற்றவர்களை, விரைந்து விடுவிப்பு செய்ய வேண்டும்.பிற பணியாளர்களை போல, கேங்மேன்களுக்கும் உள்முக தேர்வு அனுமதி அளிக்க வேண்டும். பணி ஆணை வழங்கப்படாமல் விடுபட்ட, 5,000 கேங்மேன்களுக்கு உடனே பணி ஆணை வழங்க வேண்டும். கடந்த, 2019ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த கேங்மேன் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும், 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களை களப்பணியாளர்களாக மாற்றும் வரை, நேரடி பணி நியமனங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாத சூழலில், கேங்மேன்கள் இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை