வடிவேலு சினிமா பட பாணியில் அரிசி கடையில் துணிகர கொள்ளை
பவானி; பவானி அருகே தளவாய்பேட்டையில், பவானி - சத்தி சாலையில், மோகன் என்பவர் அரிசி கடை நடத்துகிறார். கடையில் இவரது சின்னம்மா இளையம்மாள், 65, வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் கடைக்கு மூன்று பேர் வந்துள்ளனர். சிப்பமாக அரிசி வேண்டும் என்று கேட்டு, ஒரு சிப்பத்தை எடை போட்டுள்ளனர். அப்போது கல்லாபெட்டி அருகில் ஒரு பையில் பணம் வைத்திருந்ததை மூவரும் கவனித்துள்ளனர். இளையம்மாளிடம் பேச்சு கொடுத்து திசை திருப்பி, பேக்கை எடுத்துக்கொண்டு டூவீலரில் ஏறி சென்றுள்ளனர். அந்த பையில், 2.50 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. சில நிமிடங்களில் பணம் திருட்டு போனதை அறிந்து இளையம்மாள் சத்தமிட்டார். அக்கம்பக்கத்தினர் வந்தாலும் பலனில்லை. இதுகுறித் புகாரின்படி ஆப்பக்கூடல் போலீசார், வடிவேலு படத்தில் வரும் காமெடி போல், அரிசி கடையில் கொள்ளையடித்த மூவர் கும்பலை தேடி வருகின்றனர்.