மேலும் செய்திகள்
சென்னிமலையில் நாளை திருப்பணி கலந்தாய்வு
18-May-2025
சென்னிமலை: சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், 69வது வைகாசி விசாக பெருவிழா, வரும், 8ம் தேதி கோலாகல-மாக கொண்டாடப்படுகிறது. முன்னதாக, 7ம் தேதி மாலை, ஊஞ்சலுார் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. 8ம் தேதி காலை, கைலாசநாதர் கோவிலில் இருந்து, மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்த ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்றடையும். இதையடுத்து ஜெபம், ஹோமம் நடக்கிறது. மதியம், 3:30 மணிக்கு முருகப்பெருமானுக்கு பல்வேறு திரவிய அபிஷேகம் செய்வித்து, 5:௦௦ மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடக்கிறது. அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது. 8ம் தேதி காலை, 9:௦௦ மணிமுதல் இரவு, 9:௦௦ மணி வரை மலை அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மடத்தில் அன்-னதானம் வழங்கப்படுகிறது.
18-May-2025