மேலும் செய்திகள்
புரட்டாசி மாத விரதம் காய்கறிகள் விலை உச்சம்
10-Oct-2024
தீபாவளியால் காய்கறி விலை உயர்வுஈரோடு, நவ. 3-தீபாவளியால் காய்கள் பறிக்க ஆட்கள் வராததால், ஈரோடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து, விலை உயர்ந்தது.ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு, நேற்று வழக்கத்தைவிட, 40 சதவீத காய்கறி வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் சராசரியாக, 5 ரூபாய் முதல், 20 ரூபாய் வரை விலை உயர்ந்து காணப்பட்டது.இதுபற்றி காய்கறி வியாபாரிகள் கூறியதாவது: ஈரோடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக வரத்தாகும் காய்கறியில், 60 சதவீத காய்கறி மட்டுமே வரத்தானது. தீபாவளியால் கடந்த, 30, 31, 1 ஆகிய நாட்களில் பெரும்பாலான இடங்களில் காய்கறி பறிக்கப்படவில்லை. தக்காளி போன்ற குறிப்பிட்ட காய்கறிகள் மட்டுமே குறைந்த அளவில் பறிக்கப்பட்டு, அந்தந்த பகுதியில் விற்பனையானது. பிற காய்கறிகள் நேற்று மாலை பறிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு வரத்தானது. குறைந்த அளவே காய்கறி வரத்தானதால், வரை விலை உயர்ந்து காணப்பட்டது.நேற்று ஒரு கிலோ கத்தரி-50 ரூபாய், வெண்டைக்காய்-50, புடலை-50, பாகைக்காய்-60, பீர்க்கன்-70, கேரட்-110, பீன்ஸ்-130, பீட்ரூட்-80, தக்காளி-40 முதல், 50, சின்ன வெங்காயம்-70, பெரிய வெங்காயம்-70, பச்சை மிளகாய்-80, உருளை கிழங்கு-60, கொத்தவரங்காய்-50, முருங்கைக்காய்-50, பட்டை அவரை-100, கருப்பு அவரை-110, முட்டைகோஸ்-50, காளிபிளவர்-50, கறிவேப்பிலை-50, புதினா கட்டு-25 ரூபாய்க்கு விற்பனையானது. இவ்வாறு கூறினர்.
10-Oct-2024