பர்கூர் மலைப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதி
அந்தியூர், கர்நாடக மாநிலம் நால்ரோட்டிலிருந்து ராமாபுரா வரையில், கடந்த, 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தார்சாலை அமைக்கும் பணி துவங்கியது. இதனால் தமிழகத்தின் பர்கூர் மலைப்பாதை வழியாக, கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தார்ச்சாலை பணி நிறைவடைந்த நிலையில், நேற்று மாலை முதல், அந்தியூர் வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட்டிலிருந்து பர்கூர் மலைப்பாதை வழியாக, கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.