உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வழக்கத்தை விட உயரமான வேகத்தடை கோபியில் சேதமாகும் வாகனங்கள்

வழக்கத்தை விட உயரமான வேகத்தடை கோபியில் சேதமாகும் வாகனங்கள்

கோபி: கோபி அருகே சாந்தி தியேட்டர் பஸ் நிறுத்தத்தை கடந்து, பிர-தான சத்தி சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோபியை வரவேற்கும் நுழைவுவாயில் கட்டமைப்பு பணி நடக்கிறது. அதன் அருகே சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடை அமைத்துள்ளனர். வழக்கத்தை விட சற்று உயரமாக உள்ளதால், வேகத்தடையை கடக்கும்போது, வாகனங்களின் அடிப்பாகம் சேதமடைகிறது. குறிப்பாக டூவீலர் மற்றும் காருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நெடுஞ்-சாலைத்துறை நிர்வாகம் வேகத்தடையை சராசரி உயரத்துக்கு அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ