உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் வேளாங்கண்ணி மாதா தேர் பவனி

ஈரோட்டில் வேளாங்கண்ணி மாதா தேர் பவனி

ஈரோடு: இயேசு கிறிஸ்துவின் தாய் அன்னை மரியாள் பிறந்த நாள், ஆண்டுதோறும் செப்., 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் வேளாங்கண்ணி மாதா திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதையொட்டி, ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் மாதாவின் பிறப்பு திருவிழா, ஆலய பங்குத்தந்தையும், ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ராயப்பன் தலைமையில் நேற்று கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், அஞ்சுக்கோட்டை ஆலய பங்குத்தந்தை கஸ்பார் பங்கேற்று, திருப்பலி நிறைவேற்றினார். மாதாவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து வேளாங்கண்ணி மாதா வேண்டுதல் தேர்பவனி நடந்தது. பக்தர்கள் வேளாங்கண்ணி மாதா சொரூபத்தை தோளில் சுமந்து, ஆலயத்தை மூன்று முறை வலம் வந்தனர். உதவி பங்குத்தந்தை லுார்து அமிர்தராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி