வெள்ளகோவில் நகராட்சியில் ஒரே நாளில் ரூ.1.10 கோடி வரி வசூல்
காங்கேயம்:தமிழ்நாட்டில், 134 நகராட்சிகள் உள்ளன. நகராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி இனங்கள், உரிய காலத்தில் செலுத்துபவர்களுக்கு, 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. இதை கருத்தில் கொண்டு, திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் இடையே இத்தகவலை கொண்டு சேர்த்தனர்.இதையடுத்து நேற்று ஒரே நாளில், ரூ.1 கோடியே, 10 லட்சம் வரி வசூல் செய்தனர். வெள்ளகோவில் நகராட்சி வரி வருவாயில், 23 சதவீதம் வரி வசூல் செய்து தரவரிசை பட்டியிலில் தமிழகத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. இச்சாதனையை செய்து உதவிய பொதுமக்களுக்கும் நன்றியும், வசூல் செய்த ஆய்வாளர் மற்றும் உதவியாளர்களுக்கு நகராட்சி தலைவர் கன்னியரசிமுத்துக்குமார், கமிஷ்னர் வெங்கடேசன் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.