உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வி.இ.டி., கலை கல்லுாரி பட்டமளிப்பு விழா

வி.இ.டி., கலை கல்லுாரி பட்டமளிப்பு விழா

ஈரோடு, ஈரோடு, திண்டல் வி.இ.டி., கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லுாரியில், மூன்றாவது பட்டமளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக கோவை பாரதியார் பல்கலை பதிவாளர் ராஜவேல் கலந்து கொண்டு, பட்டம் வழங்கி பேசினார்.வேளாளர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயக்குமார், செயலர் சந்திரசேகர், செயற்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, குலசேகரன், குகநாதன், வி.இ.டி., கல்லுாரி நிர்வாகி பாலசுப்பிரமணியன், கல்லுாரி முதல்வர் நல்லசாமி, புல முதன்மையர் லோகேஷ்குமார், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநர் முனைவர் பழனிசாமி மற்றும் அனைத்து துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். கணினி பயன்பாட்டியல் துறை மாணவி காவியாஸ்ரீ, சமூகவியல் துறை மாணவன் போஜராஜன் ஆகியோர் பல்கலை அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றனர். இதில்லாமல் பல்வேறு துறைகளை சார்ந்த, 18 மாணவர்கள் பல்கலை தர வரிசையில் முதல் பத்து இடங்களை பெற்றனர். விழாவில், 466 மாணவ, மாணவியர் பட்டம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ