மேலும் செய்திகள்
டி.கல்லுப்பட்டி குறுவட்ட விளையாட்டு போட்டிகள்
03-Aug-2025
பெருந்துறை, பெருந்துறை குறுமைய குடியரசு நாள், தடகள போட்டி பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கடந்த, 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், கோவை, ராயல் கேர் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் மாதேஸ்வரன் சிறப்பாளராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். ஏற்பாடுகளை, பெருந்துறை குறுமைய ஒருங்கிணைப்பாளரான, சென்னிமலை அடுத்த முகாசிபிடாரியூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் குமார், உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமார் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.பாரதி பள்ளியை சேர்ந்த கவிஸ்ரீ இளையோர் பெண்கள் பிரிவிலும், கிரிஸ்தனா மூத்தோர் பெண்கள் பிரிவிலும், நிஷாந்த் இளையோர் மாணவர் பிரிவிலும், பிரணவ், நவீன், சித்தார்த் மற்றும் ஹரீஸ் ஆகியோர் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவிலும், அதிக புள்ளிகளை பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தை பெற்றனர். மேலும், இப்பள்ளி மாணவ மாணவியர், அதிக புள்ளிகளை பெற்று, ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியரையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும், பள்ளி தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர்.
03-Aug-2025