10, பிளஸ் 1 பொது தேர்வுகளில் விஜயமங்கலம் பாரதி முதலிடம்
பெருந்துறை: பெருந்துறை, விஜயமங்கலம் பராதி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகள், 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்-தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பில் மாணவி நேகா, 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று, பெருந்துறை தாலுகா அளவில் முதலிடம் பெற்றுள்ளார். பாட வாரியாக இவரது மதிப்பெண் விபரம்: தமிழ்-98, ஆங்-கிலம்-99, கணிதம்-99, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. மாணவன் ரக்சன், 495 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், பவிஷ் மற்றும் வர்ஷினி ஆகியோர், 494 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றனர். 490 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேரும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 48 பேரும், 450 மதிப்-பெண்களுக்கு மேல் 201 பேரும் பெற்றுள்ளனர்.பிளஸ் ௧ தேர்வில் மாணவி தனுஷியா, 600க்கு 597 மதிப்-பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். பாட வாரியாக இவரது மதிப்பெண் விபரம்: தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, இயற்பியல்-100, வேதியியல்-99, கணினி அறி-வியல்-100. தர்சினி, 593 மதிப்பெண் எடுத்து இரண்டாமிடம், 591 மதிப்பெண் பெற்று கவுதம் மூன்றாமிடம் பெற்றனர். பிளஸ் ௨ தேர்வில் மாணவி சந்தியா, 595 மதிப்பெண் பெற்று பெருந்-துறை தாலுகா அளவில் முதலிடம் பெற்றுள்ளார். பொதுத் தேர்-வுகளில் சாதித்த மாணவ, மாணவியர், ஆசிரியர்களை பள்ளி தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார் பாராட்டி வாழ்த்தினர்.