உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூட்டு குடிநீர் திட்டத்திற்காக கிராமங்களில் வெள்ளோட்டம்

கூட்டு குடிநீர் திட்டத்திற்காக கிராமங்களில் வெள்ளோட்டம்

ராசிபுரம் :ராசிபுரம், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிகளில் ஒரு பகுதி என, ஐந்து ஒன்றியங்கள், ஒரு நகராட்சி, எட்டு டவுன் பஞ்., உள்ளிட்ட பகுதிகளுக்கு, 850 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டத்தில், குடிநீர் இணைப்பு வழங்கும் பணி, கடந்த, இரண்டு ஆண்டாக நடந்து வருகிறது. இதற்காக, ராசிபுரம் அருகே, பெரிய நீர்தொட்டி மற்றும் நீரேற்று பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாடுகளும், சில மாதங்களுக்கு முன் தொடங்கி வைக்கப்பட்டது. முதற்கட்டமாக ராசிபுரம் நகராட்சி பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்கான வெள்ளோட்டம் நடந்து வருகிறது.நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் இதற்கான பணி தற்போது நடந்து வருகிறது. வெள்ளோட்டம் தொடங்கியதை அடுத்து ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சேப்டி வால்வுகள் மூலம், அவ்வப்போது தண்ணீரை திறந்து விடுகின்றனர். நேற்று நாமகிரிப்பேட்டை அடுத்த தண்ணீர்பந்தல்காடு வரட்டாறு பாலம் அருகே தண்ணீரை திறந்துவிட்டனர். இதனால் வெள்ளம்போல், வரட்டாறு ஓடையில் தண்ணீர் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை