மேலும் செய்திகள்
வங்கியில் கடன்: மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்ப்பு
06-Oct-2025
ஈரோடு, ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறவாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட செயலர் மாரிமுத்து தலைமையில், மனு வழங்கி கூறியதாவது:அக்., 15, பார்வை மாற்றுத்திறனாளிகளின் சர்வதேச தினமாகும். இந்நாளில், 100 சதவீதம் பார்வை மாற்றுத் திறனாளிகளை கடும் மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் இணைக்க வேண்டும். மொத்த அரசு பணிகளில், 1 சதவீத இடஒதுக்கீடு தர வேண்டும். வங்கி, கல்வி பணிகளில் பார்வையற்றோருக்கு கூடுதலாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.மாநில அரசு அறிவித்தபடி, பார்வையற்றோர் உட்பட அனைத்து மாற்றுத்திறனாளிகளின் நிரப்பப்படாத பின்னடைவு பணிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு தேர்வு உடன் நடத்த வேண்டும். நவீன மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன தொழில் நுட்ப பயிற்சி அளிப்பதுடன், லேப்டாப், ஸ்மார்ட் போன் வழங்க வேண்டும்.அனைத்து போக்குவரத்து வாகனங்களிலும் ஜி.பி.ஆர்.எஸ்., இணைக்கப்பட்டுள்ள நிலையில், பஸ்கள் செல்லும் வழி, நிறுத்தும் இடத்தை ஒலிக்க செய்ய வேண்டும். வந்து, போகும் பஸ்கள் குறித்த விபரத்தை அறிவிப்பு செய்ய வேண்டும். பாதசாரிகள் சாலைகளை கடக்கும் இடங்களில் ஒலி அறிவிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர். மாவட்ட பொருளாளர் ரேணுகா உட்பட பலர் பங்கேற்றனர்.
06-Oct-2025