கைப்பந்து போட்டி
ஈரோடு:உலக போலியோ தினத்தை முன்னிட்டு, ரோட்டரி கிளப் ஆப் ஈரோடு சென்ட்ரல் சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையேயான கைப்பந்து போட்டி ஈரோட்டில் நேற்று நடந்தது. ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில் நடந்த போட்டியை, கைத்தறி, துணி நுால் மற்றும் கதர்துறை அமைச்சர் விஜய்பாலாஜி துவக்கி வைத்தார். தி.மு.க., - எம்.பி. பிரகாஷ், கலெக்டர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். போட்டியை துவக்கி வைத்து அமைச்சர் பேசியதாவது:தற்போதும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் போலியோ உள்ளது. இது பிற நாடுகளுக்கும் பரவும் அபாயம் இருப்பதால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழக முதல்வர் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறாரோ, அதே அளவிற்கு விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார். போலியோ இல்லாத நாடாக உருவாக்க அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.