உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொண்டர்கள் எண்ணம் விரைவில் நிறைவேறும்

தொண்டர்கள் எண்ணம் விரைவில் நிறைவேறும்

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட புங்கம்-பள்ளியில், எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்-றிரவு நடந்தது. எம்.எல்.ஏ., பண்ணாரி முன்னிலை வகித்தார்.இதில் செங்கோட்டையன் பேசியதாவது: கழக பொது செய-லாளர், எதிர்க்கட்சி தலைவர் ஆணைக்கிணங்க இந்த கூட்டம் நடக்கிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விடுபட்ட குளம் குட்டைகளை நிரப்ப அத்திக்கடவு அவினாசி திட்டம்- 2ஐ செயல்படுத்த சட்டசபையில் கேள்வி எழுப்பினோம். ஆய்வு பணியில் இருப்பதாக கூறினார்கள். திட்டத்தின் இரண்டாம் கட்டம் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படும். எதிர்-காலத்தில் அ.தி.மு.க., தொண்டர்கள் எண்ணம் நிறைவேறும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை