உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பேரூராட்சி தலைவி மீதுநாளை வாக்கெடுப்பு

பேரூராட்சி தலைவி மீதுநாளை வாக்கெடுப்பு

ஈரோடு:கொடுமுடி தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் மீது, நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நாளை நடக்கிறது.கொடுமுடி பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.,-13, சுயேட்சை-1, அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் உள்ளனர். கடந்த மார்ச்சில் பேரூராட்சி தலைவி திலகவதி மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூன் 23ல் அவரை தகுதி இழப்பு செய்து அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது, திலகவதி இடைக்கால தடை பெற்றார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புரையின்படி, மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம், நாளை (௧௧ம் தேதி) மதியம், ௧:௦௦ மணிக்கு நடக்கிறது. ஈரோடு ஆர்.டி.ஓ. பார்வையாளராக இருப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை