மேலும் செய்திகள்
போலி நகை அடகு வைத்து மோசடி: 123 பேருக்கு வலை
17-Aug-2024
ஈரோடு: எழுமாத்துார், தொட்டிபாளையம் புதுாரை சேர்ந்தவர் தங்கமுத்து, 47; டாஸ்மாக் கடை விற்பனையாளர். திருமணமாகி குழந்தைகள் உள்ளன. கடந்த, 23ம் தேதி கணவன், மனைவி வேலைக்கு சென்று விட்டனர்.குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டனர். மறுநாள் பீரோவை திறந்து பார்த்தபோது, ஐந்தரை பவுன் தாலிக்கொடி, வெள்ளை அரைஞாண் கயிறு, வெள்ளி கொலுசு திருட்டு போனது தெரிந்தது. மொடக்குறிச்சி போலீசில் தங்கமுத்து புகாரளித்தார். வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்படாமல் திருட்டு நடந்ததால், வீட்டுக்கு வந்து சென்ற யாரோதான் கைவரிசை காட்டியிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர். தங்கமுத்து வீட்டுக்கு எதிரே வசிக்கும், அவரது உறவினரும், பேக்கரி ஊழியருமான, 46 புதுார், ஆணைக்கல்பாளையத்தை சேர்ந்த திருமணிகண்டன், 28, என்பவரிடம் விசாரித்தனர். தனது மனைவிக்கு நகை வாங்க, தங்கமுத்து வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். அடமானம் வைத்த நகை, வெள்ளி பொருட்களை கைப்பற்றி, திருமணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
17-Aug-2024