மேலும் செய்திகள்
சிறுமிகளுக்கு தொந்தரவுஇருவர் மீது 'போக்சோ'
14-Feb-2025
ஈரோடு: தர்மபுரி மாவட்டம் வெள்ளக்கல், பரிக்கல் பகுதியை சேர்ந்தவர் செல்வம், 45; இவரின் மகள் பிரியங்கா. மனைவியுடன் கருத்து வேறுபாட்டால், அவரை பிரிந்த செல்வம், ஈரோட்டில் கச்சேரி வீதியில் ஒரு மண்டபத்தில் காவலாளியாக வேலை செய்கிறார். மகளுக்கும் திருமணமாகி கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்தார். மற்றொரு நபரிடம் பழகிய பிரியங்கா, அந்த நபரை திருமணம் செய்து கொள்வதாக செல்வத்திடம் கூறியுள்ளார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பிரியங்கா மாய-மானார். போலீஸ் செயலியில் மகள் மாயமானது குறித்து செல்வம் புகார-ளித்தும் நடவடிக்கை இல்லாத நிலையில், ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று காலை வந்தார். பாட்-டிலில் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார், மக்கள் செல்வத்தின் மீது தண்ணீரை ஊற்றி பெட்ரோல் பாட்டிலை பறித்து வீசினர். செல்-வத்திடம் சமாதானம் பேசி விசாரணைக்கு, டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
14-Feb-2025