நீர்மட்டம் 2 அடி உயர்வு
அந்தியூர் அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் நான்கு நாட்களுக்கும் மேலாக, மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் பர்கூர் மேற்கு மலை தட்டக்கரை பகுதியிலும் விட்டு விட்டு கனமழை பெய்கிறது.இங்கிருந்து வரும் காட்டாற்று வெள்ளம், வரட்டுப்பள்ளம் அணை நீர்த்தேக்க பகுதியை அடைகிறது. இதில்லாமல் அணை நீர்பிடிப்பு பகுதிகளான கல்லுப்பள்ளம், வரட்டுப்பள்ளம், கும்பரவாணி பள்ளம் பகுதியிலும் மழை பெய்ததால், நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், 72 கன அடி நீர் வந்ததால், 20 அடியாக இருந்த நீர்மட்டம், 22 அடியை தொட்டது.