குண்டேரிப்பள்ளம் அணையில் நீர் திறப்பு
டி.என்.பாளையம் டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி, குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து, பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. வரும், ௩௦ம் தேதி வரை ஏழு நாட்களுக்கு, வலது மற்றும் இடது கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம், 2,498 ஏக்கர் புன்செய் நிலம் பாசன வசதி பெறும்.