நீர்வள ஆதாரத்துறை பொறியாளர் ஆய்வு
கோபி, நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் தாமோதரன், கோபிக்கு நேற்று வந்தார். பாரியூர் சாலை அருகே செல்லும் கூகலுார் கிளை வாய்க்காலில், துார்வாரும் பணியை ஆய்வு செய்தார். தவிர, பாரியூர் கரை கிராமத்தில் செல்லும், தடப்பள்ளி வாய்க்காலையும் ஆய்வு செய்தார். அவருடன் நீர்வள ஆதாரத்துறையின் உதவி செயற்பொறியாளர் கல்பனா, உதவி பொறியாளர்கள் குமார், சத்தி உடனிருந்தனர்.