உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கம்யூ., மாநாட்டுக்கு செல்லும் கொடி பயணத்துக்கு வரவேற்பு

கம்யூ., மாநாட்டுக்கு செல்லும் கொடி பயணத்துக்கு வரவேற்பு

ஈரோடு, சேலத்தில் இன்று முதல் வரும், 18ம் தேதி வரை இந்திய கம்யூ., கட்சி மாநில மாநாடு நடக்கிறது. கடந்த மாநாடு திருப்பூரில் நடந்ததால், அங்கிருந்து கட்சி செங்கோடியை ஏற்றிக்கொண்டு நிர்வாகிகள் சேலம் நோக்கிய பயணத்தை நேற்று தொடர்ந்தனர். திருப்பூர், ஊத்துக்குளி, பெருந்துறை, ஈரோடு, பவானி, குமாரபாளையம் வழியாக சேலத்தை அடைகின்றனர். செல்லும் வழிகளில் நிர்வாகிகள் சந்திப்பு, மக்கள் சந்திப்பில் ஈடுபடுகின்றனர். இக்கொடி பயணத்துக்கு ஈரோட்டில் வட்டார செயலர் கல்யாணசுந்தரம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ