ரீடு நிறுவனம் சார்பில் நலத்திட்ட உதவி
ஈரோடு,: சத்தியமங்கலம் ரீடு தன்னார்வ சேவை நிறுவனம் சார்பில், ஆச-னுாரில் பழங்குடியினர் மாணவ மாணவியருக்கு பள்ளி உபகர-ணங்கள், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, ரீடு நிறுவன இயக்-குனர் கருப்புசாமி தலைமையில் நடந்தது. ஆசனுார் டி.எப்.ஓ., சுதாகர், நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில் ஆசனுாரில் பல்வேறு மலை கிராமங்களை சேர்ந்த, எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் ௨ வரையிலான மாணவ, மாணவியர், கல்லுாரி மாணவியர் உட்பட, 78 பேருக்கு நோட்டு புத்தகம், சீருடை, புத்தக பை, குடை, ஸ்வெட்டர் உள்ளிட்ட, 2.31 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி வரவேற்றார். டாம்ஸ் பாலன் மற்றும் மாதேவி, உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ரீடு நிறுவன திட்ட ஒருங்கிணைப்-பாளர் பழனிச்சாமி மற்றும் திட்ட அலுவலர்கள் சிவராஜ், செல்வம், சரவணகுமார், கிருத்திகாஸ்வரி உள்ளிட்டோர் செய்தி-ருந்தனர். நிறைவில் திட்ட அலுவலர் ரம்யா நன்றி கூறினார்.