உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவி வழங்கல்

ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவி வழங்கல்

காங்கேயம் :காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் வீரணம்பாளையம் ஊராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் கோரிக்கை மனு பெற்றார். சோளம் மற்றும் காய்கறி விதை தொகுப்பு, முகாமில் பெறப்பட்ட மனுக்களில் உடனடியாக தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்வில் காங்கேயம் தாசில்தார் மோகனன், காங்கேயம் வடக்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன் தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள், மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை