உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மேற்கு வங்க சிறுமி பெருந்துறையில் மீட்பு

மேற்கு வங்க சிறுமி பெருந்துறையில் மீட்பு

பெருந்துறை, மேற்கு வங்கத்தை சேர்ந்த, 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, திருமணம் செய்து கொண்டு, பெருந்துறைக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்திய, அதே மாநிலத்தை சேர்ந்த வாலிபரை, மேற்கு வங்க போலீசார் பெருந்துறையில் கைது செய்து, சிறுமியை மீட்டனர். மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்னா, விடிசி., மணிபூராவை சேர்ந்த ராகுல்தாஸ், 22, அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். பின்னர், சிறுமியை அழைத்து வந்து, பெருந்துறை பணிக்கம்பாளையத்தில், வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார்.இந்நிலையில், சிறுமியை காணவில்லை என பெற்றோர் அளித்த புகார்படி, மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் சிறுமி இருப்பதாக, மேற்கு வங்க போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், பெருந்துறை வந்து சிறுமியை மீட்டு, ராகுல்தாசை கைது செய்தனர். நேற்று பெருந்துறை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், ராகுல்தாசை ஆஜர்படுத்தி அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை