உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வணிக வளாகம் திறப்பது எப்போது? கோபி வியாபாரிகள் எதிர்பார்ப்பு

வணிக வளாகம் திறப்பது எப்போது? கோபி வியாபாரிகள் எதிர்பார்ப்பு

கோபி: கோபி பழைய காய்கறி மார்க்கெட் வளாகத்தில், கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாக கடைகள், திறப்பு விழா காண்பதில் இழு-பறி நீடிக்கிறது.கோபி, பெரியார் திடல் எதிரே இயங்கிய, பழைய தினசரி அங்-காடி மற்றும் அதை சுற்றி இருந்த, 33 கடைகளை இடித்துவிட்டு, 6.99 கோடி ரூபாயில் நவீன தினசரி வணிக வளாக கடை கட்டும் பணி, 2021ல் அக்., மாதம் துவங்கியது. தரை தளத்தில், 1,906 சதுர மீட்டர் பரப்பளவில், வாகன பார்க்கிங் வசதி, முதல் தளம், உள் மற்றும் வெளிப்பகுதி என நுாறு கடைகள் வரை கட்டப்பட்டுள்-ளன. மூன்றாண்டுகளாக, ஆமை வேகத்தில் நடந்த பணி, இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. பணிகள் அனைத்தும் முடிந்து, எப்-போது திறப்பு விழா காணும் என கோபி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை