உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெள்ளை வாவல் மீன் ரூ.1,200க்கு விற்பனை

வெள்ளை வாவல் மீன் ரூ.1,200க்கு விற்பனை

ஈரோடு: தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் இருப்பதால் கேரளாவில் இருந்து மட்டும் கடல் மீன், 9 டன் ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மார்க்கெட்டிற்கு நேற்று வந்தது. அதிகபட்சமாக வெள்ளை வாவல் கிலோ, 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.பிற மீன்கள் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): தேங்காய் பாறை-600, வசந்தி-400, திருக்கை 450, கனவா-600, டுயானா-700, மத்தி-300, ஐயிலை-350, ப்ளூ நண்டு-750, பெரிய இறால்-800, சின்ன இறால்-600, விளாமீன் 600, சங்-கரா-450, கிளி மீன்-600, மயில் மீன் 700, முரல்-400, சால்மோன்-900, வஞ்சிரம் 1,100, கருப்பு வாவல்-900, கடல் கொடுவா 800. தமிழக மீன் பிடி தடை காலம், 14ம் தேதி நள்ளிர-வுடன் முடிந்துள்ளது. எனவே வரும் வாரங்களில் அதிகளவில் மீன்கள் வரத்தாகும். அப்போது வரத்து அதிகரித்து விலை வெகு-வாக குறைய வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை