உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வடிகால் வசதியுடன் அகலமாகும் முருகன் கோவில் மலைப்பாதை

வடிகால் வசதியுடன் அகலமாகும் முருகன் கோவில் மலைப்பாதை

வடிகால் வசதியுடன் அகலமாகும்முருகன் கோவில் மலைப்பாதைசென்னிமலை, செப். 28-தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக, கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலமாக, சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. மலையில் உள்ள கோவிலுக்கு செல்ல, மலைப்பாதையில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலையை, 6.70 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும் பணி நடக்கிறது. இதில் ஒரு பகுதியாக சாலையை அகலப்படுத்தப்படுகிறது. மேலும் மழை பெய்தால் சாலையில் வெள்ள நீர் தேங்குவதை தவிர்க்க சாலையின் குறுக்கே, 13 இடங்களில் சிறுபாலம் கட்டி மழை நீர், வடிகால் அமைக்கப்படவுள்ளது. சிறு பாலம் கட்டப்படும் இடங்களில் குழி தோண்டி தற்போது பணி தொடங்கியுள்ளது. இந்தப்பணியால் மலைக்கோவிலுக்கு டூவீலர், கார்களில் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் பணியாளர் மற்றும் அர்ச்சகர்கள் மட்டுமே, டூவீலர்களில் சென்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை