மாநகர், மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை
ஈரோடு, ஈரோடு மாநகரில் நேற்று காலை வெயில் தாக்கமின்றி வானம் மந்தமாகவே இருந்தது. காலை, 9:30 மணிக்கு குளிர் காற்றுடன் தொடங்கிய சாரல் மழை, விட்டு விட்டு மதியம், ௧:௦௦ மணி வரை தொடர்ந்தது. கே.கே.நகர் ரயில்வே நுழைவு பாலத்தில் வழக்கம்போல் மழை நீர் கலந்த கழிவுநீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதித்தது. போக்குவரத்து போலீசார் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். * பவானியில் நேற்று காலை முதல் மாலை வரை, சாரல் மழை விட்டு விட்டு பெய்தபடி இருந்தது. சுற்றுவட்டார பகுதிகளான காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம், ஜம்பை, பெரியமோளபாளையம், திப்பிசெட்டிபாளையம், தளவாய்பேட்டை, குருப்பநாயக்கன்பாளையத்திலும் இதே நிலை காணப்பட்டதது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.நொய்யலில் வெள்ளம்சென்னிமலை அருகேயுள்ள ஒரத்துப்பாளையம் அணையில், கடந்த, 18ம் தேதி காலை, ௫ அடிக்கு தண்ணீர் தேங்கி நின்றது. நீர்வரத்து, 221 கன அடியாக இருந்தது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொடர் கனமழையால் நேற்று முன்தினம், 339 கன அடியாக அதிகரித்தது. அப்படியே அணை வழியாக திறக்கப்பட்டதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நொய்யல் ஆற்று தரைப்பாலத்தை கடந்து செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.கோபியில்...கோபியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. பிறகு, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை சாரல் மழை தொடர்ந்ததுடன், வானம், மேகமூட்டமாகவே தென்பட்டது. மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது.