மாநகர், மாவட்டத்தில் பரவலாக மழை
ஈரோடு, ஈரோடு மாநகரில் நேற்றும் காலையில் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் மாலை, ௪:௦௦ மணியளவில், கருமேகம் சூழ்ந்து துாறல் மழை பெய்தது. 10 நிமிடத்திற்கு நின்று, லேசான இடி மற்றும் காற்றுடன் சிறிது நேரம் பெய்தது. இந்நிலையில் இரவு, ௭:௪௫ மணிக்கு, மீண்டும் மிதமாக தொடங்கிய மழை, ௯:௦௦ மணியை கடந்து நீடித்தது.* சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம், 3:௦௦ மணிக்கு தொடங்கிய மழை, ௩:௩௦ மணி வரை கொட்டி தீர்த்தது. சென்னிமலையில் தொடர் மழை பெய்து வருவதால், விவசாயிகள் மற்றும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.* அந்தியூர் அடுத்த சங்கராப்பாளையம், மூலக்கடை, மந்தை, வட்டக்காடு, நல்லாகவுண்டன்கொட்டாய், குரும்பபாளையம் மேடு, எண்ணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நேற்று அதிகாலை, 4:00 மணி முதல் ௪:௩௦ மணி வரை, கனமழை பெய்தது. இதேபோல் பர்கூர் மலை, வெள்ளித்திருப்பூர் சுற்று வட்டாரத்திலும் மழை பெய்தது. * சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை, 5:45 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. 10 நிமிடம் சாரலாக நீடித்த நிலையில், 6:20 வரை மிதமாக பெய்தது. இதேபோல் கடம்பூர் மலை பகுதியிலும் சாரல் மழை பெய்தது. 32.40 மி.மீ., மழை பதிவுஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக வரட்டுபள்ளம் அணை பகுதியில், ௩௨.௪௦ மி.மீ., மழை பதிவானது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): மொடக்குறிச்சி--12, கொடுமுடி-3.60, சென்னிமலை-2.60, கொடிவேரி-8.40, குண்டேரிபள்ளம்-8.80, நம்பியூர்-13, சத்தி-28, தாளவாடி-7.10.