உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடன் தந்த பணம் வரல கைம்பெண் தற்கொலை

கடன் தந்த பணம் வரல கைம்பெண் தற்கொலை

வெள்ளகோவில், வெள்ளகோவில் அருகே ஒத்தக்கடையை சேர்ந்தவர் வாசுகி, 40; இவருக்கு, 17 வயதில் ஒரு மகன், 15 வயதில் ஒரு மகள் உள்ளனர். கணவர் ரவிச்சந்திரன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தனக்கு தெரிந்த ஒரு நபரிடம் வட்டிக்கு பணம் கொடுத்திருந்தார். தற்போது மகன் கல்வி செலவுக்கு தேவைப்பட்டதால் கேட்டுள்ளார். ஆனால், பணம் கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டவர், நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ