உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

பவானி, ஆப்பக்கூடல் அருகே கீழ்வாணியை சேர்ந்தவர் கவுஸ்மைதீன், 48; வாரச்சந்தை வியாபாரி. மனைவி ரஜியா பானு, 44; கீழ்வாணியில் வாய்க்காலுக்கு துணி துவைக்க நேற்று முன்தினம் சென்றார். இந்நிலையில் சந்தை வியாபாரத்தை முடித்து இரவில் வீடு திரும்பினார். வீட்டில் மனைவி இல்லை. அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது ஆற்றுக்கு துணி துவைக்க சென்றது தெரிய வந்தது. அங்கு சென்று பார்த்தபோது கரையில் அவரது செருப்பு, துணிகள் இருந்தது. அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஆற்றில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. கணவர் புகாரின்படி ஆப்பக்கூடல் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை