உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / செங்குட்டை ஏரி சிறுவர் பூங்காவில் பாதுகாக்கப்படுமா மாட்டு வண்டி!

செங்குட்டை ஏரி சிறுவர் பூங்காவில் பாதுகாக்கப்படுமா மாட்டு வண்டி!

கோபி: கோபி அருகே இந்திரா நகரில், படகு இல்லத்துடன் கூடிய செங்குட்டை ஏரி சிறுவர் பூங்கா உள்ளது. இதன் வளாகத்தில் பழமையான மாட்டு வண்டி பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு வரும் மக்கள், மாட்டு வண்டி மீதேறி செல்பி எடுக்கின்றனர். இதனால் பாகங்கள் சேதமடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாட்டு வண்டியானது வெயில், மழையில் வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட பஞ்., அல்லது கோபி யூனியன் நிர்வாகம், மாட்டு வண்டிக்கு பாதுகாப்பாக கொட்டகை வசதி செய்ய வேண்டும். அதன் மீது செல்பி பிரியர்கள் ஏறாத வகையில், எச்சரிக்கை பலகையும் வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி