உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பசு வந்து சென்ற பிறகாவது பஸ் ஸ்டாண்டில் பஸ் ஓடுமா?

பசு வந்து சென்ற பிறகாவது பஸ் ஸ்டாண்டில் பஸ் ஓடுமா?

ஈரோடு, ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சோலாரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க, 2021-22ல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, 2022 ஆக.,18ல் பணியாணை வழங்கி பணி தொடங்கப்பட்டது. 90 சதவீத பணி முடிந்த நிலையில், மீதி பணிகள் விரைந்து முடித்து, ஜூலை மாத இறுதி அல்லது ஆக., மாதம் முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள போது திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கோமாதா பூஜை நேற்று காலை நடந்துள்ளது. பூஜை முடிந்ததும் பசு கோமியத்தை பஸ் ஸ்டாண்ட் வளாகம் முழுவதும் தெளித்துள்ளனர். பஸ் ஸ்டாண்ட் பணிகள் விரைந்து முடிய வேண்டும் என்று பிரார்த்தித்து கொண்டு, ஒப்பந்ததாரர் தரப்பில் இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு சிலரே கலந்து கொண்டுள்ளனர். பசு வந்து சென்ற பிறகாவது, பஸ்கள் ஓடினால் சரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vijayakumar
ஜூலை 01, 2025 06:17

ஈரோடு மாநகராட்சி மக்களுக்கான மாநகராட்சி இல்லை..விரைவில் மாற்ற பட வேண்டிய அரசு


Vijayakumar
ஜூலை 01, 2025 05:33

ஈரோடு மாநகராட்சி மக்களுக்கான மாநகராட்சியாக இல்லை...அமைச்சரும் கண்டு கொள்ளவில்லை...விரைவில் மாற்றப் வேண்டிய அரசு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை