உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிவன்மலை கோவில் அடிவாரத்தில் பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?

சிவன்மலை கோவில் அடிவாரத்தில் பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?

காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த சிவன்மலையில், நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இதன் அருகில் பழமையான வேப்ப-மரம் மத்தியில் பட்டுபோயும், காய்ந்தும் வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன் வீசிய பலத்த காற்றால், மரத்தின் ஒரு பகுதி கிளை முறிந்து கோவில் சுவர் மீது விழந்து சேதத்தை ஏற்படுத்தி-யது. இந்நிலையில் நஞ்சுண்டேஸ்வரர் சாமி கோவிலில், சிவன்-மலை கோவில் கந்த சஷ்டி விழா தற்போது தொடங்கி நடந்து வருகிறது. வரும், 7ம் தேதி சூரசம்ஹார விழா நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். மரம் உள்ள வழியா-கதான் சுவாமி ஊர்வலம் செல்லும். பட்டுப்போன மரம் எந்நேரத்-திலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சம்மந்தப்-பட்ட அதிகாரிகள் உடனடியாக மரத்தை வெட்டி அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி