உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

ஈரோடு, ஈரோடு-தொட்டிபாளையம் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையே, தனியார் கல்லுாரியை ஒட்டிய ரயில் தண்டவாளம் அருகே நேற்று முன்தினம், 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் கை, கால், தலையில் பலத்த ரத்த காயங்களுடன் கிடந்தார். ரயில்வே போலீசார் பெண்ணை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்கும்போது, அவ்வழியே வந்த ரயில் மோதியது தெரியவந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பெண் இறந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. மஞ்சள்-ஆரஞ்சு பூ போட்ட சேலை, சிவப்பு ஜாக்கெட் அணிந்து இருந்தார். கால் முட்டிக்கு மேல் காய தழும்பு இருந்தது. இடது கால் தொடையில் மச்சம் உள்ளது. இறந்த பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை