மொபட் மீது அசுர வேக லாரி மோதி பெண் பலி
சென்னிமலை:சென்னிமலை அருகே அசுர வேக லாரி மோதியதில், பெண் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.அரச்சலுார், சென்னிமலை கைகாட்டி பிரிவை சேர்ந்தவர் கஸ்துாரி, -55; கணவர் தாமோதரன் இறந்த நிலையில், அம்மாபாளையத்தில் ஒரு சோலார் யூனிட் கம்பெனியில், தோட்ட வேலை செய்து வந்தார். கோவில்பாளையத்தில் உள்ள மூத்த மகள் கிருபா ஜெயந்தி வீட்டுக்கு, எலக்ட்ரிக் மொபட்டில் நேற்று சென்றார். அங்கிருந்து அரச்சலுாருக்கு, மாலையில் கிளம்பினார். நாமக்கல்பாளையம்-தண்ணீர்பந்தல் ரோட்டில் சென்றார். சென்னிமலை, அம்மாபாளையம், நேதாஜி தெருவில் வளைவான பகுதியில் சென்றபோது, சிவானந்தன் என்பவர் அதிவேகத்தில் ஓட்டி வந்த லாரி, மொபட் மீது மோதியது. இதில் லாரி வலதுபுற பின் சக்கரத்தில் விழுந்தவர், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.