உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தோட்ட வீட்டில் பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறிப்பு

தோட்ட வீட்டில் பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறிப்பு

கொடுமுடி, கொடுமுடி, கொளத்துபாளையத்தை சேர்ந்த மருதப்பன் மனைவி பார்வதி, 55; இவர்கள் தோட்டம் ஆயப்பரப்பில் இருந்து சிவகிரி செல்லும் சாலையில் உள்ளது. நேற்று முன்தினம் காலை, 9:00 மணியளவில் தோட்டத்தில் பார்வதி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பிரதான சாலையில் ஒரு பைக் நின்றது. அதில் ஒருவர் தயார் நிலையில் உட்கார்ந்திருந்தார். பைக்கில் இருந்து இறங்கி வந்த ஒருவர், பார்வதியிடம் கத்தியை காட்டி மிரட்டி, அரை பவுன் கம்மலை பறித்து கொண்டு பைக்கில் ஏறி தப்பினார். இதுகுறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பார்வதியிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அப்பகுதி 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி